அமெரிக்காவில் வேலைபார்க்கிறீர்களா? : இனி உங்கள் வாழ்க்கைத்துணைக்கு அங்கு வேலை கிடைக்காது!Sponsoredஅமெரிக்காவில் ஹெச்.1பி விசா மூலம் பணியாற்றிவருவோரின் வாழ்க்கைத்துணைக்கு, இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் வேலை பெறுவது கடினமாக இருக்கும்.

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்துவந்தபோது, ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள், தங்களது வாழ்க்கைத்துணைக்கும் அமெரிக்காவில் வேலைதேடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகைமூலம் அமெரிக்காவில் வேலைபார்ப்பவர்கள், தங்களது வாழ்க்கைத்துணைக்கும் வேலை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், ஒபாமாவின் அத்தனை சலுகைத் திட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுவருகின்றன.

Sponsored


இந்த வகையில், ஹெச்1பி விசாமூலம் இத்தனை காலம் வழங்கப்பட்டுவந்த சலுகைகளை ரத்துசெய்யும் முடிவில் இருக்கிறார் ட்ரம்ப். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1’ பி விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இதில், 70 சதவிகித விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகின்றன. ட்ரம்ப் ஹெச்1பி விசா சலுகைகளை நீக்குவதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களாகத்தான் இருப்பர். இத்திட்டம், ட்ரம்ப்பின் ‘அமெரிக்கப் பொருள்களையே வாங்குங்கள்; அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored