முறியடிக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்: ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்த ‘நன்றி’!Sponsoredரஷ்யாவில் குறிக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்க அமெரிக்க புரிந்த உதவிக்காக,  ட்ரம்புக்கு புதின் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததாகவும், அதேபோல ட்ரம்ப்பின் அதிபர் தேர்தல் வெற்றிக்கு ரஷ்ய உளவுத்துறை உதவியதாகவும் கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில், ரஷ்ய- அமெரிக்க உறவு தற்போது மேலும் வலுப்பெற்று வருவதாகவே தெரிகிறது. 

Sponsored


சமீபத்தில், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற உள்ளதாக அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைச் செய்தியை அடுத்து, ரஷ்யாவில் நடந்த தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில், ஏழு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டு, அவர்களின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யத் தலைநகரில் நடக்கவிருந்த பெரும் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளதாக, மாஸ்கோ உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Sponsored


இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு, ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசிமூலம் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் ரஷ்ய அதிபரின் க்ரெம்லினும் உறுதிப்படுத்தியுள்ளன.Trending Articles

Sponsored