”வான்னா க்ரை” தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம்: குற்றம் சாட்டும் அமெரிக்காSponsored’வான்னா க்ரை’ ரேன்சம்வேர் தாக்குதலுக்கு வடகொரியாதான் முக்கியக் காரணம் என அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக, 'வான்னா க்ரை' (Wanna Cry or Wanna Crypt) ரான்சம்வேர் மாறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகள் 'வான்னா க்ரை' மூலம் பாதிப்படைந்துள்ளன. இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில், இதுதான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், ரான்சம்வேர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளன.

Sponsored


வான்னா க்ரை ரான்சம்வேர் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலகின் முன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான காஸ்பர்ஸ்கை மற்றும் அவாஸ்ட் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,   ' 'வான்னா க்ரை’ என்ற ரான்சம்வேர் தாக்குதலுக்கு வடகொரியாதான் முற்றிலும் பொறுப்பு' என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது. 'வடகொரியா தொடர்ந்து மோசமான தாக்குதல் செயல்களில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored