``ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா எடுத்தது தவறான முடிவு” - சுப்பிரமணியன் சுவாமிSponsored``ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்துவிட்டது” எனப் பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல்அவிவ் நகரம் இருந்தது. சமீபத்தில்‘, ஜெருசலேம் நகரை, அந்நாட்டின் தலைநகராக அமெரிக்கா தன்னிச்சையாக அறிவித்தது. ஜெருசலேம், வேறு நாட்டுக்குத் தலைநகராக இருக்க கூடாது என்றும் அமெரிக்கா கூறியது. ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடிவரும் நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு உலக நாடுகளிடையே குறிப்பாக பாலஸ்தீனத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பாதுகாப்புக் கவுன்சில் ஓர் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. 

Sponsored


இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா தன் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்தியா அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. இதுகுறித்து பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “தலைநகரத்தை மேற்கு ஜெருசலேம் நகரில் அமைக்க அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது பெரும் தவறு. மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலுடையது. அதனால் அங்கு தூதரகம் இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored