அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: பிலிப்பைன்ஸை உலுக்கிய ‘டெம்பின்’ புயல்Sponsoredபிலிப்பைன்ஸ் நாட்டைப் புரட்டி எடுத்து வரும் ‘டெம்பின்’ புயலுக்கு இதுவரையில் சுமார் 200 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு மீட்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

சுனாமி, வெள்ளப்பெருக்கு, புயல், சூறாவளி என இயற்கைப் பேரிடர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை வதைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த சூழலில் இரண்டு நாள்களுக்கு முன்னர் கடுமையான புயல் ஒன்று பிலிப்பைன்ஸ் நகரில் மையம் கொண்டது. இப்புயல் தற்போது வலுப்பெற்று அந்நாட்டையே புரட்டி எடுத்துவிட்டது. இப்புயலுக்கு ‘டெம்பின்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மிண்டானோ நகரின் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Sponsored


இந்தப் புயலினால் டெல் நார்ட்டே மாகாணத்திலும் மிண்டானோவா மாகாணத்திலும் சுமார் 200 பேர் பலியாகி இருக்கலாம் என்றும், சுமார் 160 பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுபோக, மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

Sponsored
Trending Articles

Sponsored