தாய், தந்தைக்கு பறக்கும் விமானத்தில் சர்ப்ரைஸ் அளித்த பைலட் -நெகிழ்ச்சி வீடியோ!Sponsoredபிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த பெற்றோர் - மகன் சந்திப்பு வீடியோ ஒன்று செம வைரல் ஆகியுள்ளது. 

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் விமானியாகப் பணியாற்றி வருகிறார் ஜுயன் பெளலோ ஃபெர்மின். இவர் கடந்த 17 வருடமாக பெர்முடாவில் வசித்து வரும் தனது பெற்றோருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது இல்லை. இது இவரது பெற்றோருக்கும் வருத்தமாக இருந்துவந்துள்ளது. 

Sponsored


இந்த வருடம் தனது பெற்றோருக்கு சர்ப்ரைஸ் அளிக்க நினைத்தார் ஃபெர்மின். அதன்படி வான்கோவெர் இருந்து மணிலா செல்லும் விமானத்தில் இருந்த தனது பெற்றோரை திடீரென வந்து சந்தித்து சர்ப்ரைஸ் அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. இந்த சர்ப்ரைஸ் சந்திப்பு குறித்து கூறிய ஃபெர்மின், “நான் அவர்களைச் சந்திக்க நடந்துசெல்லும் போது மகிழ்ச்சியாகவும், ஒருவிதமான பதற்றமும் இருந்தது. ஆனால் இந்த வீடியோ இவ்ளோ வைரல் ஆகும் என நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார். 
 

Sponsored
Trending Articles

Sponsored