அகதிகளுக்கு அமெரிக்கா விதித்த தடை: உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்ஈரான், ஈராக் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த தடையை உள்ளூர் நீதிமன்றம் ரத்து செய்வதாக அறிவித்தது.

Sponsored


ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு அக்டோபர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, அதிபரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ஹவாய் மாகாண நீதிமன்றத்தில் பொதுநல ஆர்வலர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அதிபரின் உத்தரவில் முற்றிலும் நியாயமில்லை என ட்ரம்பின் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Sponsored


இதன் பின்னரும் ட்ரம்ப் தனது உத்தரவில் உறுதியுடன் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தார். மேலும் இந்தத் தடை உத்தரவு 120 நாள்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் உத்தரவு வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 120 நாள் தடை உத்தரவு முடிந்த பின்னரும் தடையை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க நீக்கவில்லை. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் தடை உத்தரவை நீக்குவதாக சியாட்டில் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored