கட்டலோனியா தேர்தல் எதிரொலி: ஒற்றுமையுடன் இருக்க ஸ்பெயின் மன்னர் அழைப்புSponsoredகட்டலோனியா தேர்தலில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதை அடுத்து குழப்பங்கள் அதிகரிக்காமல் இருக்க ஸ்பெயின் மன்னர் பிரிவினைவாதிகளை ஒற்றுமையுடன் இருக்க அழைப்புவிடுத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களின் கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

Sponsored


இந்நிலையில், தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த கட்டலோனியா அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்போவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் கட்டலோனியாவின் பிரிவினைவாதக் கட்சிகள் பூயிக்டேமோண்ட் தலைமையில் ஒன்றிணைந்து போட்டியிட்டு தற்போது தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளன. இதனால், நாட்டில் குழப்பம் நிலவலாம் என ஸ்பெயின் மன்னர் ஒற்றுமையுடன் இருக்க பிரிவினைவாதக் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார். தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியிலும், “மோதல் இன்று ஒற்றுமையுடன் வாழ்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored