ரஷியாவில் குண்டு வெடிப்பு..! 10 பேர் படுகாயம்ரஷிய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்தது. அதில் 10 பேர் படுகாயமடைந்தனர். 

Sponsored


ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று மாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர் என்று அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored