அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் அர்ஷத் ஓரா (வயது 19). இவர் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தார். இவரின் குடும்பத்தார் டால்டன் பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள். அர்ஷத் ஓரா நேற்று கடையில் இருந்தார். அப்போது கடைக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கடையில் இருந்த பணம் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

துப்பாக்கிச்சூட்டில் குண்டுக்காயம் ஏற்பட்டு, அர்ஷத் ஓரா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொள்ளையர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 12,000 டாலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored