வடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து!   Sponsoredஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பெரியளவில் தயாரிக்க வேண்டும் என்று  வடகொரியா அதிபர் ’கிம் ஜாங் உன்’ அந்நாட்டு மக்களிடையே பேசியுள்ளது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


 

அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. அமெரிக்காவை வீழ்த்துவதே தங்களின் இலக்கு என்றும் கூறிவருகிறது. வடகொரியா மீது ஐ.நா பாதுகாப்பு அமைப்பு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் ஐ.நா.,வையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கின்,  புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்களிடம் நேற்று ஊடகம் வாயிலாக உரையாடினார். புத்தாண்டு வாழ்த்து  கூறிவிட்டு அவர் பேசியதாவது.. “வட கொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது. அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு” என்று பேசி உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored