இது ட்ரம்ப்பின் குபீர் புத்தாண்டு வாழ்த்து!Sponsored2018-ம் ஆண்டு பிறந்ததையடுத்து, உலகத் தலைவர்கள் அவர்களது ஸ்டைலில் வாழ்த்துகள் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குபீர் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

வாழ்த்துச் செய்தியில், `நம் நாடு மிக வேகமாகவும் சிறந்ததாகவும் வளர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் எனது நண்பர்கள், ஆதரவாளர்கள், எதிரிகள், என்னை வெறுப்பவர்கள், மற்றும் மிக நேர்மையற்ற `ஃபேக் மீடியாவுக்கும்' மகிழ்ச்சியான மற்றும்  ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துகள். 2018-ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த வருடமாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் நாம் கிரேட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். யாரும் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நாம் கிரேட்டாக மாறிக்கொண்டிருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்' என்று ஊடகங்களைச் சாடி வாழ்த்துக் கூறியுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored