`உண்மை எது என்பது விரைவில் தெரியவரும்!' - ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுக்கும் பாகிஸ்தான்Sponsoredஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில், அமெரிக்கா எப்படி பாகிஸ்தானுக்கு நட்புடன் செயல்பட்டது என்றும், அதற்கு பாகிஸ்தான் எப்படி முரணாக நடந்தகொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் தற்போது பதில் அளித்துள்ளது. 

தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப், `அமெரிக்கா, கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அவர்கள் அதற்கு கைமாறாக, பொய்களையும் வஞ்சகத்தையும்  வழங்கியுள்ளனர். நமது தலைவர்களை அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து இதைப் போன்று செய்துள்ளனர். நாம் ஆஃப்கானிஸ்தானில் கண்டுபிடித்து அழிக்கும் தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். இது, இனிமேலும் நடக்காது' என்று தெரிவித்துள்ளார். புத்தாண்டு அன்று அமெரிக்க அதிபரின் இப்படிப்பட்ட ட்வீட், உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. 

Sponsored


இதற்கு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், `அமெரிக்க அதிபர் டொனால்ட் டர்ம்ப்பின் ட்வீட்டுக்கு நாங்கள் விரைவில் எதிர்வினையாற்றுவோம். உலகுக்கு எது உண்மை என்பதை நாங்கள் எடுத்துக் கூறுவோம். உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை கண்டிப்பாக புரியவைப்போம்' என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored