பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தியது இதனால்தான்! அமெரிக்கா சொல்லும் காரணம்Sponsoredதீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடுகொண்டுள்ளதாகக் கூறி, பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கிவந்த சுமார் 1,617 கோடி ரூபாய் நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் அவைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக இரட்டை நிலைப்பாடுகொண்டுள்ள பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கிவந்த 255 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இந்த ஆண்டு நிறுத்திவைத்தது. 

Sponsored


தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்காவுடன் பணியாற்றும் பாகிஸ்தான், மறுபுறம் தீவிரவாதிகளை உருவாக்கவே செய்கிறது. பாகிஸ்தானில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் தீவிரவாதிகள், ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க வீரர்கள்மீது தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தானின் இந்த விளையாட்டை, அமெரிக்க அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தானிடமிருந்து அதிக ஒத்துழைப்பை அமெரிக்கா எதிர்பார்க்கிறது’ என்றார். இந்த விவகாரம்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ், ‘தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் அரசால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored