#Metooவுக்கு அடுத்து TimesUp... பாலியல் தொல்லைக்கு எதிராக ஹாலிவுட் பெண்களின் புதிய இயக்கம்!Sponsoredடந்த ஆண்டு, உலகம் முழுவதும் பாலியல் தொல்லைக்கு எதிராகப் பெண்கள் நடத்திய #MeToo பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியது. ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டனுக்கு எதிராக இளம் நடிகை  ஹாஷ்லே ஜுட் என்பவர் முதலில் குரல் கொடுத்தார். தொடர்ந்து, ஏஞ்சலினா ஜோலி, கேட் வின்செல்ட் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாகப் பேசினர். இது, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. 

இதனை அடுத்து, இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே டைம்’ஸ் அப் (Time's Up) என்ற இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கின்றனர் ஹாலிவுட் பெண்கள். பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் ஷோண்டா ரிம்ஸ் (Shonda Rhimes), நடிகைகளான எம்மா ஸ்டோன் (Emma Stone), ரைசி விதெர்ஸ்பூன் (Reese Witherspoon), இயக்குநர் அவா ட்யூவெர்னே (Ava DuVerney), மெர்லி ஸ்ர்டீப் (Meryl Steep) உள்ளிட்ட 300 ஹாலிவுட் பெண்கள், இந்த இணையதளத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஹாலிவுட்டில் நடக்கும் ஆண் - பெண் பாகுபாடு, சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களையும் முன்னிறுத்தி இது செயல்படப்போகிறது. 

Sponsored


Sponsored


இதனைத் தெரிவிக்கும் விதமாக, அந்த இணையதளத்தில் வெளியிட்டிருந்த கடிதத்தில், ‘தன் மேலதிகாரியின் பாலியல் விருப்பத்துக்கு இணங்க மறுத்த ஒவ்வொரு பெண் விவசாயிக்கும், விருந்தாளியின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க முயற்சித்த வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், ஹோட்டலுக்கு வரும் கஸ்டமர்களின் சீண்டல்களைப் புன்னகையுடன்

தாங்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கும், தொழிற்சாலையில் நடக்கும் பாலியல் சீண்டலைத் தாங்கிக்கொள்ளும் பெண்களுக்கும், பிற நாட்டிலிருந்து வந்து வேலை செய்யும் பெண்களுக்கும், தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சூழ்நிலையில், தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலைப் பற்றி பேசாமல் பொறுத்துக்கொள்ளும் எல்லாப் பெண்களுக்கும், நாங்கள் ஆதரவு தருகிறோம். உங்களுடன் நாங்கள் நிற்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ஓர் இயக்கமாக உருவாக்கியிருக்கின்றனர். 

ஹார்வி வென்ஸ்டன் பற்றி சர்ச்சை எழுந்தபோது, அங்குள்ள தேசியப் பெண் விவசாயிகள் சங்கம், ஹாலிவுட் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தது. அந்தச் சங்கத்தைச் சேர்ந்த ஏழு லட்சம் பேரும், இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். அதற்காக கடித்தத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகம், விவசாயம், வீட்டு வேலை, அலுவலகம் செல்பவர்கள் என எல்லாத் துறைப் பெண்களுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். 

நாடாலி போர்ட்மேன் (Natalie Portman), ரைசி விதெர்ஸ்பூன், கேட் பிலன்செட் (Cate Blencett), ஏவா லாங்கோரியா (Ava Longoria) உள்ளிட்ட பல நடிகைகள், இந்த இயக்கத்துக்கு நிதியுதவி செய்துள்ளனர். கிட்டதட்ட 13 மில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது. பணியிடங்களில் பாலியல் துன்புறத்துல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் இருபாலருக்கும் சட்டரீதியான உதவிகள் செய்வதற்கு இது பயன்படுத்தப்படும். இந்த இயக்கத்துக்குத் தலைவர் யார் என்பது தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு, ஆதரவு தருவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, 'டைம்ஸ்’ பத்திரிகை, தலைசிறந்த மனிதர்களாக, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored