விசா நடைமுறையில் மாற்றம்... 5 லட்சம் இந்தியர்களுக்குப் பாதிப்புSponsoredஅமெரிக்காவில் வேலைபார்க்க வெளிநாட்டினவருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வழங்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

வெளிநாட்டினர், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக எச் 1 பி விசா அந்நாட்டால் வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஹெச் 1 பி விசாவுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணியாற்றிவர் மேலும் தொடர்ந்து பணியாற்றுவதற்காக அந்நாட்டு அரசால் கிரீன்கார்டு வழங்கப்படும்.

Sponsored


அவர்கள் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து, அந்தக் கார்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், கார்டு கிடைக்கும்வரை அங்கே இருந்து பணியாற்ற முடியும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தின்படி, எச்-1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்த நபர், அந்தக் கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. 6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர், நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

Sponsored


கிரீன்கார்டை அமெரிக்க அரசு வழங்கிய பிறகுதான், அவர் மீண்டும் அந்நாட்டுக்குச் செல்ல முடியும். அதேபோல, எச் 1 பி விசா பெற்ற நபர்கள், தங்கள் கணவரையோ மனைவியையோ அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு எச் 4 இ.ஏ.டி என்ற விசா வழங்கப்படும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணியாற்றலாம். தற்போது, இந்த எச் 4 இ.ஏ.டி விசாவையும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறைகளால், எச் 1 பி விசா பெற்று ஆறு ஆண்டுகள் முடிந்தவர்களும் எச் 4 இ.ஏ.டி விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். அதனால், 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. Trending Articles

Sponsored