இதுகிட்ட கேட்டுக்கோங்க!’ - பத்திரிகையாளர்களுக்கு `ஷாக்' கொடுத்த பிரதமர்Sponsoredபத்திரிகையாளர்களிடமிருந்து தப்பிக்க புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சனோச்சா.


 தாய்லாந்தின் பாங்காக்கில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்குபெற வந்த பிரதமர் பிரயுத்திடன் கேள்விகேட்க அரங்கத்தின் வெளியே பத்திரிகையாளர்கள் தயாராக நின்றுகொண்டிருந்தினர். அரங்கை நோக்கி வேகமாக நடந்துவந்த பிரயூத், பத்திரிகையாளர்களைப் பார்த்ததும், அவரின் உதவியாளரிடம் சைகையில் `அதைக் கொண்டுவாருங்கள்’ என்றார். பிரயூத்தின் ஆள் உயர அட்டையில் செய்த சிலையைக் கொண்டுவந்து வைத்தார் அவரின் உதவியாளர். `எந்தக் கேள்வியாக இருந்தாலும் இதனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி வேகமாக நகர்ந்தார். அவரின் இந்தச் செய்கையைச் சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர்கள் திகைத்து நின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. செய்தியாளர்களின் அரசியல் கேள்விகளைத் தவிர்க்கவே இதுபோன்று அவர் நடந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அந்த வீடியோவில் மற்றொரு சுவாரஸ்யம் இருக்கிறது. பத்திரிகையாளர்களை திகைப்பில் ஆழ்த்திவிட்டு, கூலாக ரஜினியைப் போன்று `பாபா முத்திரை’ காண்பித்துவிட்டு செல்கிறார்! 

Sponsored
Trending Articles

Sponsored