பாகிஸ்தானில் ராணுவத் தளம் அமைக்கத் திட்டமா? - சீனா விளக்கம்Sponsoredபாகிஸ்தானில் ராணுவத்தளம் அமைக்க சீனா முயற்சி செய்வதாக வந்த செய்திகளைச் சீனா மறுத்துள்ளது.

சீனா, பாகிஸ்தானில் 5,000 கோடி டாலர் மதிப்பிலான, `சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தை'ச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகக் குவாதர் துறைமுகம் அதிக அளவிலான சரக்குகளைக் கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்திய அரசுக்கு அச்சுறுத்தலான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், அங்கு சீனா ராணுவத் தளம் அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் சிக்கலாக மாறிவிடக்கூடும். 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புத்தாண்டு தினத்தன்று பேசும்போது, பாகிஸ்தானைக் கடுமையாக வறுத்தெடுத்தார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சாடினார். இதையடுத்து, ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுக்கு எதிர்நிலைப்பாடு கொண்ட சீனாவிடம் பாகிஸ்தான் இன்னும் நெருக்கம் காட்டலாம் என்று சர்வதேச ஊடகங்கள் கூறின.

இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'வாஷிங்டன் டைம்ஸ்' நாளிதழ், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஜிவானி பகுதியில் ராணுவத்தளம் அமைக்க சீன அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதாகச் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான் அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடும் என்றும் அந்த நாளிதழ் கூறியிருந்தது. இது சீனாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால், இந்தச் செய்தியை சீன அரசு நிராகரித்துள்ளது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை என்று சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லீ காங் விளக்கம் அளித்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored