அப்பார்ட்மென்டைக் கொளுத்திய அமெரிக்க வீரர்! - அதிர்ச்சிக் காரணம்வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்டிங் நகரில், சிலந்தியைக் கொல்ல முயன்றபோது அடுக்குமாடிக் குடியிருப்பே பற்றி எரிந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Sponsored


கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெட்டிங் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அமெரிக்க பட்டாலியன் தலைமை நிர்வாகி ராப் பிட், தன் வீட்டில் ராட்சத சிலந்தியைக் கண்டு அதிர்ந்துள்ளார். சிகரெட் லைட்டர் போன்று பெரியளவில் இருக்கும் டார்ச் லைட்டரை வைத்து சிலந்தியைக் கொல்ல முயற்சி செய்துள்ளார் ராப் பிட். சிலந்தி மீது தீப்பொறி விழ, அது நழுவிச் சென்று மெத்தை மீது ஓடியது. சிலந்தியின் உடம்பில் இருந்த தீ மெத்தையிலும் பரவியுள்ளது.

Sponsored


மெத்தை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென அருகில் இருந்த திரைச்சீலைகளுக்குப் பரவியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளிலும் தீ பரவியது. தீயணைப்புப் படையினர் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அங்கு 11,000 டாலர் மதிப்புள்ள பொருள்கள் தீயில் நாசமாகின. இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ராப் பிட், `அந்த ஸ்பைடர் மிகவும் பெரியதாக இருந்தது. அதனால்தான் பயந்துபோய் கொல்ல நினைத்தோம்’ என்று தெரிவித்துள்ளார். பட்டாலியன் படையின் தலைமை நிர்வாகி சிலந்திக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Sponsored
Trending Articles

Sponsored