’பொங்கலோ பொங்கல்!’ - சிங்கப்பூர் பிரதமரின் அசத்தல் வாழ்த்துSponsoredசிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


 

லீ சியன் லூங்  ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத் தெரிவித்து  இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

Sponsored


Sponsored


சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல்வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த லீ சியன் லூங் ’சிங்கப்பூரில் நிலவும் கடும் குளிரும், பனிமூட்டமும் ஒளிரும் பொங்கல் பண்டிகையின் பிரகாசத்தை சற்றும் குறைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுருந்தார். லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படத்தைத் தோண்டி எடுத்து தற்போது பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்!Trending Articles

Sponsored