இங்கிலாந்தின் அமைச்சரான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்!Sponsoredஇந்தியாவை இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஆண்டதும், அதற்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதும் பழங்கதை. தற்போது அதே இங்கிலாந்து அரசில் நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் காலம் வந்துவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிகபட்ச சாதனையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி-க்களாக தேர்வுபெற்றனர். அவர்களில் ஒருவர்தான் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். 

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். அடுத்ததாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது. இங்கிலாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை இந்தியரான இவர், காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தபடி, தன் மனவியுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திவந்தார். அதோடு, இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தீவிரமாக கட்சி பணியாற்றிவந்தார்.

Sponsored


வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்ட் பகுதி மிகப்பெரிய கிராமியம் சார்ந்த பாராளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹாக் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அவர், 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் பதவி விலகியதுடன், ஒட்டுமொத்த அரசியலிலிருந்தும் ஓய்வு பெற்றார். அந்த இடத்துக்கான தேர்தல் 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில், ஏற்கெனவே கன்சர்வேட்டிவ் கட்சி செல்வாக்காக உள்ள நிலையில், அக்கட்சி சார்பாக  ரிஷி சுனக் போட்டியிட்டு, மொத்தம் 27,744 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரது வாக்கு சதவீதம் 51.4%. 

Sponsored


கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கட்சியின் எம்.பி.யாக செயல்பட்டவருக்கு தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் வீட்டு வசதி, உள்ளாட்சித் துறை இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இன்னொரு இந்திய வம்சாவளியான பெர்ஹாம் தொகுதி பெண் எம்.பி சுயல்லா பெர்னாண்டஸுக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது தொடர்பான ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சுயல்லா பெர்னாண்டஸ், யூனியன் பிரதேசமான கோவாவைப் பூர்வீகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் முன்பே இன்னொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலோக் சர்மா, இங்கிலாந்து அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வந்தார். அவரும் இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ஆக, தற்போது மூன்று இந்திய வம்சாவளி அமைச்சர்கள் இங்கிலாந்து அரசின் பொறுப்புக்கு வந்திருப்பது இந்தியர்களான நமக்குப் பெருமையான விஷயம்.

இத்தகைய அரசியல், பொருளாதார மாற்றங்களை உலகமயமாக்கலின் இன்னொரு நல்விளைவாகத்தான் பார்க்க முடிகிறது.Trending Articles

Sponsored