`என்றும் மறக்க முடியாத ரணங்களைக் கொடுத்த சாத்தான்' - நீதிபதி முன்பு கண்ணீர்விட்ட வீராங்கனைகள்Sponsoredஅமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிரான வழக்கில் 156 பெண்கள் சாட்சி கூறியிருப்பது அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். ஜிம்னாஸ்டிக் மாணவிகள் 7 பேருக்கு சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017 நவம்பர் மாதம் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. லாரிக்கு எதிரான வழக்கு நீதிபதி ரோஸ்மரி முன்னிலையில் கடந்த சில நாள்களாக விசாரிக்கப்பட்டுவருகிறது. 7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகதான் லாரி மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் லாரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள் சாட்சி கூறியிருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாட்சி அளித்த 156 பெண்களில் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளும் அடக்கம். லாரிக்கு எதிராகப் பெண்கள் சாட்சி கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சாட்சி கூறிய பெண்களில் சிலர் பேசியது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. அவற்றில் சிலரின் சாட்சியங்கள் பின்வருமாறு...

கைல் ஸ்டீபன்
''லாரி நாசர் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியபோது எனக்கு வயது 6. எங்கள் குடும்ப நண்பரான லாரி மீது என் பெற்றொர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். லாரி என்னிடம் தவறாக நடந்துகொண்டதைப் பற்றி என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. எனக்கு நடந்தது என்ன என்பதை சரியாகச் சொல்லவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நான் வலிமையான பெண்ணாக வந்து நிற்கிறேன். எனக்கு நடந்ததை விவரிக்கிறேன்.''

மரோனே (லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனை)

''என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது. எனக்கு அப்போது 15 வயது. போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன். எங்களுடன் மருத்துவர் லாரி நாசரும் வந்திருந்தார். மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லாரி நாசர் அருகில் இருந்தேன். பிறகுதான், அவர் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. நான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லாரி நாசர், சிறுமிகளைச் சீரழித்த சாத்தான். என் மனதில் என்றும் மறக்க முடியாத ரணங்களை கொடுத்த சாத்தான்.''

Sponsored


வைபர்
''நான் லாரி நாசரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண். ஆனால், என்னை நான் அப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் ஒலிம்பிக் வீராங்கனை. ‘Victim' கிடையாது. எங்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்தக் கொடுமைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பொறுப்பேற்க வேண்டும். இனி இப்படி நடக்கக் கூடாது.''

Sponsored 

இப்படியாக ஒவ்வொருவரின் சாட்சியும் ஆழமாக அழுத்தமாக நீதிபதி முன்னிலையில் பதிவானது. இதையடுத்துப் பேசிய நீதிபதி ரோஸ்மரி ‘லாரி நாசர், உன்னைத் தண்டிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன். நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன்’ என்று கூறி தீர்ப்பு நகலில் கையெழுத்திட்டார். 

நன்றி - The GuardianTrending Articles

Sponsored