அமெரிக்காவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!ஸ்விட்சர்லாந்து நாட்டின் தேவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் நடந்தது. இதில் உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்திய பிரதமர் மோடியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் தொழில் தொடங்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Sponsored


அவரது உரையின்போது, `நான் இங்கு அமெரிக்க மக்களின் பிரதிநிதியாகவும் அவர்களின் குரலாகவும் வந்திருக்கிறேன். ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் முன் கூற ஆசைப்படுகிறேன். அமெரிக்காவில் மீண்டும் தொழில் தொடங்கலாம். அதற்கான சூழல் இப்போது மீண்டும் அமைந்துள்ளது. இதுதான் அமெரிக்காவில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் மிகச் சரியான நேரம். தாராளமான தொழிலையும் வியாபாரத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அது சரியாக இருக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored