ஹியூமன்+சிம்பன்ஸி = ஹியூமன்ஸி..! ரஷ்யா உருவாக்கிய போர் வீரன்!? #HumanzeeSponsored"இது நிஜம். ஆம் நிஜம் தான். அது பிறந்தது. அது ஓர் பேரதிசயம். அதை உருவாக்கும்வரை அது எப்படி வரும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால்... அதைப் பார்த்ததும் பயந்துவிட்டார்கள். அது அவர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்தார்கள். அதனால், அந்த மருத்துவர்கள்... யார் அதை உருவாக்கினார்களோ அந்த மருத்துவர்கள்... அவர்களே அதைக் கொன்றுவிட்டனர். ஆம், உலகின் முதல் ஹியூமன்ஸி (Humanzee) உருவாக்கப்பட்டது உண்மை. உருவாக்கப்பட்ட ஹியூமன்ஸி கொல்லப்பட்டதும் உண்மை... இதெல்லாம் நடந்தது 1920களில், ஃப்ளோரிடாவில் இருக்கும் ஓர்  ஆராய்ச்சிக் கூடத்தில் ..."

“பரிணாம வளர்ச்சி உளவியலாளர்” (Evolutionary Psychologist) கார்டோன் காலேப் (Gordon Gallup) சமீபத்தில் வெளியிட்ட இந்தக் கருத்து அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கதைக்குள் போவதற்கு முன்னர் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது:

Sponsored


1. மனிதர்களும், சிம்பன்ஸிகளும் ஒரே மூதாதையர்களிலிருந்து (sahelanthropus tchadensis) வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 5-லிருந்து 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Sponsored


2. மனிதர்களுக்கும், சிம்பன்ஸிகளுக்கும் 86%லிருந்து 95% வரையில் மரபணு ஒற்றுமை (DNA Similarities) இருக்கலாம்.

3. சிம்பன்ஸிகளும், மனிதர்களும் இரண்டு கால்களைக் கொண்டு நடக்கின்றனர்.

4. கற்கால மனிதன் எப்படி கற்களை ஆயுதமாக பயன்படுத்தினானோ, சிம்பன்ஸிகளும் அதுபோன்ற கல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சான்றுகள் இருக்கின்றன.

இப்படியாக மனிதர்களுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. 

“ஹியூமன்ஸி" (Humanzee). மனிதர்களையும், சிம்பன்ஸிகளையும் இணை சேர்த்து உருவாக்கப்படும் உயிரினத்துக்கு (அப்படி ஒன்று இதுவரை ஆதாரபூர்வமாக உருவாக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்)  தான் "ஹியூமன்ஸி" என்று சொல்கிறார்கள். கார்டோன் காலேப் பல ஆண்டுகளாகவே சிம்பன்ஸிகள்குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். சிம்பன்ஸி போன்ற மிருகங்களைக் கண்ணாடி முன்னாடி நிறுத்தி, அவை கண்ணாடிகளில் தங்களை அடையாளம் காணும் திறன் கொண்டுள்ளன என்பதை நிரூபித்தார். அதை நிரூபித்த அந்த 1970-களின் காலங்களில், அவர்தான் இந்த `ஹியூமன்ஸி' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.

1960-ல் ஆப்ரிக்காவின் காங்கோவில் ஒரு சிம்பன்ஸி குட்டி பிறந்தது. அது மொட்டைத் தலையுடன் காணப்பட்டது. அது மற்ற வழக்கமான சிம்பன்ஸிகளைக் காட்டிலும் சற்று மாறுபட்டிருந்தது. `மிருகப் பயிற்சியாளர்' ஃபிராங் பர்கர் (Frank Berger) என்பவர் அந்த சிம்பன்ஸியை கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் வளர்த்தார். `ஆலிவர்' (Oliver) என பெயரிடப்பட்டிருந்த அந்த சிம்பன்ஸியை அந்தக் காலங்களில் கார்டோன் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தினார். பின்னர், இறுதியாக சிம்பன்ஸி இல்லை...அது ஒரு ஹியூமன்ஸி என்று கூறினார். அப்போதே அது பல விவாதங்களைக் கிளப்பியது. பின்னர், இரண்டாயிரமாம் ஆண்டின் நெருக்கத்தில்தான் அது சாதாரண சிம்பன்ஸி என்று நிரூபணம் ஆனது. 

ஹியூமன்ஸி என்று சொல்லப்பட்ட சிம்பன்ஸி "ஆலிவர்"

சிம்பன்ஸியையும், மனிதனையும் இணை சேர்த்து ஓர் புது உயிரினத்தை உருவாக்குவது என்பது பல நூறு ஆண்டுகளாகவே பேசப்பட்டு வரும் ஓர் விஷயம். 11-ம் நூற்றாண்டில் கிறித்துவ துறவி புனிதர் பீட்டர் டமியன் (Peter Damian) உலகின் முதல் ஹியூமன்ஸியை உருவாக்கினார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை.

பயிற்சியாளர் ஃபிராங் பர்கரோடு ஆலிவர்

1920களில் ரஷ்ய ஆராய்ச்சியாளர் இலியா இவானவ் (Ilya Ivanov) ஹியூமன்ஸி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மனித விந்தனுக்களை, சிம்பன்ஸியின் கருவறையில் செலுத்தி ஹியூமன்ஸியை உருவாக்க முயற்சித்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. பின்னர், சிம்பன்ஸியின் விந்துவை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தினார் இவானவ். ஆனால், திடீரென விந்து எடுக்கப்பட்ட சிம்பன்ஸி இறந்துவிட்டது. இதுவும் பெரும் தோல்வியில் முடிந்தது. இப்படியான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக அவர் 1930-ல் ரஷ்யாவிலிருந்து கஜகஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1932-ம் ஆண்டு இதயம் செயலிழந்து அவர் இறந்துபோனார்.

இவானவ்வின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ஒரு கதை இருப்பதாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.

ரஷ்யா ஆராய்ச்சியாளர் இலியா இவானவ்

ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஒரு வலிமையான ராணுவப்படையை உருவாக்க விரும்பினார். அதாவது மனிதர்களைத் தாண்டிய சக்தி அதற்கு இருக்க வேண்டும். கடுமையான வெப்பநிலையில் கூட, கஷ்டம் பாராமல், பல நாள் உணவு கிடைக்காவிட்டாலும் கூட வீரியமாகப் போராடக் கூடிய ஒரு படையை அவர் உருவாக்க விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் இவானவ். ஆனால், சொன்ன மாதிரி அவரால் ஹியூமன்ஸிகளை உருவாக்க முடியாததால் தான் அவர் நாடு கடத்தப்பட்டார் என்றும் சொல்பவர்கள் உண்டு.

1967-ல் சீனாவிலும் இதேபோன்ற ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெண் சிம்பன்ஸியின் கருப்பைக்குள் ஆண் மனிதனின் விந்தணு செலுத்தப்பட்டது. அந்த சிம்பன்ஸி கருவுமுற்றது. ஆனால், பிரசவத்துக்கு முன்பே அது திடீரென இறந்துபோனது. 
இப்படியாக வரலாறு முழுக்க இந்த ஹியூமன்ஸிகள் குறித்து எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதன் நம்பகத்தன்மை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே தான் உள்ளது. இப்படியான சூழலில் தான், ஹியூமன்ஸி குறித்த பரபரப்பான கருத்தைக் கூறியுள்ளார் கோர்டான்...

ஆலிவர்

"மீண்டும் சொல்கிறேன்... இது உண்மை. இதை என்னுடைய மூத்த பேராசிரியர் ஒருவர் எனக்கு சொன்னார். ஆம்... ஹியூமன்ஸி உருவாக்கப்பட்டது உண்மை. அது உடனடியாகக் கொல்லப்பட்டதும் உண்மை."Trending Articles

Sponsored