17 வயதில் 6 குழந்தைகளின் தாயான ஷெர்ரி ஜான்சன்.... இன்று அமெரிக்காவின் சென்சேஷனல் போராளி!Sponsoredஒரு துன்பம் நடக்கும்போது, 'தனக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது' என நினைப்போம். ஷெர்ரி ஜான்சன் அதனையே தன் வாழ்க்கை லட்சியமாகச் செயல்பட்டு, இன்று புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான மசோதா நேற்று (ஜனவரி 31) நிறைவேறியிருக்கிறது. அதைப் பல போராட்டங்களுக்குப் பின் பரிசீலனைக்குக் கொண்டுசேர்த்திருக்கிறார், 57 வயதாகும் ஷெர்ரி.

யார் இந்த ஷெர்ரி ஜான்சன்?

Sponsored


குழந்தைத் திருமணம் எவ்வளவு கொடுமையானது என்பது தெரியும். அதன் உயிர் சாட்சியாக வாழும் ஷெர்ரி ஜான்சனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டால், உங்களை சில நிமிடமாவது உறையவைக்கும். ஃப்ளோரிடா மாகாணத்தின் டாம்பா என்கிற நகரத்தில், தன் அம்மாவுடன் வாழ்ந்துவந்தார் சுட்டிப் பெண் ஷெர்ரி ஜான்சன். ஏழு நாள்களும் சர்ச்சுக்குச் செல்லும் அளவுக்கு மதநம்பிக்கையில் மூழ்கியவர் ஷெர்ரியின் அம்மா. சர்ச் கட்டுப்பாடுகளின்படி பேன்ட், சட்டை, அணிகலன்கள் அணியாத கட்டுப்பாடான குடும்பம். சர்ச் வேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கும் அம்மா, எப்போதாவது ஷெர்ரியுடன் அமர்ந்து பெயின்டிங் செய்வார். அந்தச் சமயத்தில், பள்ளியில் தடுப்பூசி போட மருத்துவர்கள் வந்தபோது, ஷெர்ரி ஏழு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தாயை வரவைத்து, பள்ளியிலிருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.

Sponsored


"குடும்ப வறுமையின் காரணமாக, மதிய உணவுக்காக சொந்தக்காரப் பெண் ஒருவரிடம் பணம் வாங்கச் செல்வேன். அவள் வீடு, சர்ச் பிஷப் வீட்டுக்கு அருகில் இருந்தது. ஒரு நாள் பணம் வாங்கச் சென்றபோது, ’அந்தப் பணம் என்னிடம் இருக்கிறது. வந்து பெற்றுக்கொள்’ என்று பிஷப் அவரது வீட்டுக்கு அழைத்தார். அங்கே என்னைப் படுக்கையில் படுக்கச் சொல்லி பாலியல் வன்புணர்வு செய்தார். 'இது எதுவுமில்லை' என்று சொல்லி அனுப்பிவிட்டார். என்ன நடந்தது என்று புரியாத வயதில் கால் முழுவதும் வழிந்திருந்த ரத்தத்தைக் கழுவிக்கொண்டேன். அதன்பிறகு, பல மாதங்கள் பிஷப் மற்றும் அந்த சர்ச் திருத்தொண்டர் எனப்படும் ஊழியரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இதுபற்றி தாயிடம் பலமுறை சொல்லியும் நம்பவில்லை” என்கிறார் ஷெர்ரி.

ஒரு கட்டத்துக்கு மேல், இதுவும் அனிச்சையான செயலாக, வாழ்வின் ஒரு பகுதியாகவே நம்ப ஆரம்பித்துவிட்டார் ஷெர்ரி. அந்தச் சமயத்தில், பள்ளியில் தடுப்பூசி போட மருத்துவர்கள் வந்தபோது, ஷெர்ரி ஏழு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தாயை வரவைத்து, பள்ளியிலிருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்ப சொல்லிவிட்டார்கள். 

'யார் அது?' என்று தாய் கேட்க, 'உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்' என்ற சிறுமி ஷெர்ரி, அந்தத் 'திருத்தொண்டனின்' பெயரைக் கூறினாள். அதன் பின் ஷெர்ரியின் அம்மா, ஒரு குழந்தைக்கு என்ன செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்தார்.  'தன் பெண் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொய் சொல்லிவிட்டாள்' என்று சர்ச்சில் மன்றாடிவிட்டு, சற்று தூரம் தள்ளி இருக்கும் மருத்துவமனையில் மகளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது ஷெர்ரி ஏழு மாத கர்ப்பம். அவள் வயதோ 10. காடுகளையும் மலைகளையும் கற்பனை செய்யவேண்டிய வயதில், குழந்தை எப்படிப் பிறக்கும் எனக் கற்பனை செய்துகொண்டிருந்தாள் ஷெர்ரி. 1970ம் ஆண்டு ஷெர்ரிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, ஷெர்ரியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திருத்தொண்டனுக்கே 1971ஆம் ஆண்டு மார்ச் 29ல் அவரைத் திருமணம் செய்துகொடுத்தார் ஷெர்ரியின் அம்மா. 

“என் தாய் எனக்கு ஒரு வெள்ளை நிற கவுன் வாங்கிக்கொடுத்தார். திருமணத்தைப் பதிவுசெய்ய ஒரு பகுதியில் வயது கருதி ஒப்புதல் மறுக்கப்பட, இன்னொரு பகுதியில் பதிவுசெய்தார்கள். அவருக்கு என் வயது தெரியும். ஆனாலும், திருமணத்தைப் பதிவுசெய்தார்” என்று அந்த வயதுக்கே சென்று, நீதிபதியின் செயலைச் சுட்டுகிறார் ஷெர்ரி.

திருமணத்துக்குப் பிறகு, ஐந்தாம் வகுப்பு மாணவியாகப் பள்ளிக்குச் சென்ற ஷெர்ரி, இன்னொரு பக்கம் மனைவி, தாய் என்கிற சுமைகளையும் சுமந்தாள். ஷெர்ரியின் அம்மா வழிபட்டுவந்த சர்ச்சில், குழந்தைக் கட்டுப்பாடு குறித்த நம்பிக்கை கிடையாது. எனவே, அடுத்தடுத்து ஆறு குழந்தைகளுக்குத் தாயானாள் ஷெர்ரி. 'கணவரிடம் அதிகம் பேசியதுகூட கிடையாது' என்ற ஷெர்ரியின் வார்த்தைகள், ரணம். 

ஷெர்ரி வயதுக் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடியபோது, அவளோ தன்  குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருந்தாள். 17 வயதில் ஆறு குழந்தைகளுக்குத் தாயான ஷெர்ரிக்கு, விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. 19 வயதில், ஒருவழியாக அந்த திருமண உறவிலிருந்து விவாகரத்துப் பெற்ற ஷெர்ரிக்கு, அடுத்த திருமணமும் வன்முறை நிரம்பியதாகவே இருந்தது. 27 வயதில் இன்னும் மூன்று குழந்தைகள். 

“ஒரு மனைவி எப்படி நடந்துகொள்வார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. சர்சுக்கு வரும் கணவன் மனைவிகளைப் பார்த்து தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு முறை நான் கர்ப்பமானபோதும், என் கணவர் எங்காவது கண்காணாமல் சென்றுவிடுவார். நான் வீட்டுடன் குழந்தைகளையும் பார்த்துக்கொள்வேன்” என வாழ்வின் வலிகளை வார்த்தைகளாகச் சொல்கிறார்.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறையைத் தொடர்ச்சியாக அனுபவித்தவர்களுக்குத் தன்னம்பிக்கையும், வாழ்வின் மீதான பிடிப்பும் அற்றுப்போய்விடும். பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கே மனைவியாகி, குழந்தையிலேயே குடும்ப வன்முறைக்கு ஆளான பெண். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் வாழ்க்கையைச் சந்திக்க முடிவுசெய்தார் ஷெர்ரி. வேறொரு இடத்துக்கு மாறினார். வேறொரு சர்ச்சுக்கு மாறினார். உளவியல் மருத்துவரை அணுகினார்.

”ஒன்பது குழந்தைகளின் தாயாக ஒரு குழந்தை” என விவரிக்கிறார் ஷெர்ரியின் உளவியல் மருத்துவர்.

ஷெர்ரியின் ஓட்டம் நிற்கவில்லை. அதற்கான தைரியத்தை தன் வலிகளிலேயே தேடிக்கொண்டார். அவரது முயற்சிகளின் பலனாக, தற்போது அமெரிக்க ஃப்ளோரிடா மாகாணத்தில், குழந்தைத் திருமணத்துக்கு எதிரான மசோதா, இறுதிக் குழுவின் ஒப்புதலுக்காகவும், அதன் பின்பான முழு அவையின் வாக்குக்காகவும் காத்திருக்கிறது. இந்த மசோதா, ஃப்ளோரிடா மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டாலும், ஷெர்ரி ஓய்வெடுக்கப்போவதில்லை. இப்படி ஒரு சட்டம் வந்திருக்கிறது என்று எல்லா இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாகவும், மற்ற மாகாணங்களிலும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சியெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் இந்தத் துணிச்சல் பெண். 


ஷெர்ரியின் அசாத்திய மன உறுதி ஒவ்வொரு பெண்ணுக்கும் விதை.Trending Articles

Sponsored