வெள்ளை ரோஜாவுக்குப் பின்னால் இருக்கும் கதை... 2018 கிராமி விருதுகள்! #MeTooSponsoredஉலகில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் கனவு விருதான 60-வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்றது. சிறந்த பாடல், பாடகர்கள், இசைத் தொகுப்பு, பாடல் வரிகள், ஆல்பம் என இசை தொடர்பான அனைத்து துறைகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. வளர்ந்துவரும் இளம் பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் `புரூனொ மார்ஸ் (Bruno Mars)', ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு, ஆறிலும் வெற்றிபெற்று இந்த விழாவின் நாயகனாகத் திகழ்ந்தார். இந்த விழாவின் மற்றுமொரு ஹைலைட், #MeToo, #TimesUp இயக்கங்களை ஆதரித்து, ஆண், பெண் என இசைக்கலைஞர்கள் பலர் `வெள்ளை ரோஜா'வை தங்கள் உடையோடு பொருத்திக்கொண்டதுதான்.

சென்ற மாதம் நடந்த `கோல்டன் குளோப்' விருதுகள் விழாவில், உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கருநிற ஆடைகளை அணிந்து `மீ டூ', `டைம்ஸ் அப்' போன்ற பிரசாரங்களுக்கு ஆதரவளித்தனர். இதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களும் வெள்ளை ரோஜா ஏந்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர். அமைதி, நம்பிக்கை, அனுதாபம் முதலியவற்றின் சின்னமாக வெள்ளை ரோஜா கருதப்படுவதால், `Do It Yourself' என்ற அமைப்பு, மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்து, கிராமி விருது விழாவன்று விழிப்புஉணர்வு ஏற்படுத்த முன்வந்தனர்.

Sponsored


Sponsored


இசை விருதுகளாச்சே, ஆடல் பாடல் என சுவாரஸ்யமான பல நிகழ்வுகளுக்கு இடையில் ஹிலாரி கிளின்டனின் என்ட்ரி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமி விருதைத் தொகுத்து வழங்கும் ஜேம்ஸ் கார்டனுடன் இணைந்து ஹிலாரி கிளின்டனின் முன்பதிவு செய்யப்பட்ட காணொலி அனைவரையும் கவர்ந்தது. இதில் ஹிலாரி, பிரபல எழுத்தாளர் மைக்கேல் வுல்ஃப் எழுதிய `Fire and Fury: Inside the Trump's White House' எனும் புத்தகத்தைப் படிப்பதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டன.

சென்ற வருடத்தில் `ஷேப் ஆஃப் யூ' (Shape of You), `டெஸ்பாசிட்டோ' (Despacito), `24k மேஜிக்' உள்பட பல சர்வதேசப் பாடல்கள் இந்தியாவிலும் ஹிட்டடித்தன. அவை கிராமி விருதையும் தட்டிச் சென்றன. லேடி காகா, ரிஹானா, கென்ரிக், `டெஸ்பாசிட்டோ' Luis Fonsi, தி செயின்ஸ்மோக்கர்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டு, இந்த விழாவில் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.

இந்த விழாவில் அதிக கவனம் ஈர்த்த சிலரின் ட்ரெண்டி ஆடையுடன் ரெட் கார்பெட் மொமன்ட் இங்கே...

பாடகி ஜாய் வில்லா, கைகளால் வரையப்பட்ட ஓவியம் பதித்த வெள்ளை நிற கவுன், கையில் `Choose Life' என்ற வாசகம்கொண்ட ஹாண்ட்பேக், கைக்கடிகாரம், கஃப், தலையில் கிரீடம் அணிந்து தேவதையைப்போல் காட்சியளித்தார்.


அனைவரின் ஃபேவரைட் லேடி காகா, நிலம் படரும் லேஸ் வேலைப்பாடுகளுடைய ட்ரெயின் கவுன், காதுகளில் டேங்க்லர் மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு மிளிர்ந்தார். கருநிற உடையில் வெள்ளை ரோஜாவைத் தோளில் ஏந்தி `MeToo' பிரசாரத்துக்கு தன் ஆதரவையும் பதித்தார்.

ராப்பர் (Rapper) கார்டி, வெள்ளை நிற bo-peep உடை அணிந்து, கைகளில் பிரேஸ்லெட், மோதிரம், கால்களில் வெள்ளை நிற ஹீல்ஸ், படிந்த சிகையலங்காரத்தோடு கைகளில் ஒரு வெள்ளை ராஜாவையும் ஏந்தி, கற்பனைக் கதைகளில் கண்ட தேவதைபோல் காட்சியளித்தார்.

நீல நிற சிகை, கைகளில் க்ளவுஸ், கருநிறக் கண்ணாடி, உடலை ஒட்டிய கருநிற பாடிகான் டிரஸ் என, கார்ட்டூன்களில் வரும் வில்லியைப்போல் தோற்றமளித்தார் மாடலும் நடிகையுமான ஜென்னி மேக்கார்த்தி.

வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித், வண்ண வண்ண பேட்ச் (Patch) வேலைப்பாடுகள் நிறைந்த பேன்ட், டிசைனர் ஜாக்கெட், ஹேர் கலரிங் என அவருக்கே உரிய பாணியில் மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தார்.

`MeToo' பிரசாரம், ஹிலாரியின் காணொலி, கலைஞர்களின் ஆடல்பாடல் எனக் கோலாகலமாக நிகழ்ந்தது, 2018-ம் ஆண்டின் கிராமி விருதுகள் வழங்கும் விழா.Trending Articles

Sponsored