அடுத்தவரின் வீடியோவைத் திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்!Sponsoredபாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ யூ-ட்யூப் சேனலை தற்காலிகமாக யூ-ட்யூப் முடக்கியுள்ளது. அனுமதியில்லாமல் இன்னொருவரின் வீடியோவை வெளியிட்ட காரணத்தால் பாகிஸ்தான் அரசின் கணக்கு முடக்கப்பட்டது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் இர்பான் ஜுனஜோ. இர்பான் ஜுனஜோ சொந்தமாக ஒரு யூ-ட்யூப் சேனல் வைத்துள்ளார். அதில், அடிக்கடி வீடியோக்களைப் பதிவிடும் அவருக்குக் கணிசமான அளவில் ஃபாலோயர்களும் உள்ளனர். இதனிடையே  பாகிஸ்தானின் அழகை சொல்லும் விதமாக 'family friendly activities in pakistan'  என்கிற வீடியோவை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைத்தான் பாகிஸ்தான் அரசு தன் சேனலில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அனுமதியில்லாமல் என்னுடைய வீடியோவை அரசு வெளியிட்டுள்ளது என இர்பான் ஜுனஜோ புகார் தெரிவிக்கவே, தற்போது பாகிஸ்தான் அரசின் கணக்கை யூ-ட்யூப் முடக்கியுள்ளது. 

Sponsored


Sponsored


பின்பு சில மாற்றங்களுடன் அந்தக் கணக்கு செயல்படத் தொடங்கியது. இருப்பினும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இர்பான் ஜுனஜோ, "என்னுடைய வீடியோவை செய்திச் சேனல்கள் திருடியதைப் போலவே, எனது அரசும் திருடியுள்ளது. அரசின் இந்தச் செயல் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அரசின் இந்தச் செயல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. இதேபோல் கடந்த வருடம் டெல்லி கல்லூரி மாணவி ஒருவர் இந்தியாவை வெறுப்பது போல் பதாகை ஏந்திய போலி புகைப்படத்தை வெளியிட்டு பாகிஸ்தான் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored