’’இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய லண்டன் தமிழர்கள்’’ - சைகை காட்டி மிரட்டிய அதிகாரி! (வீடியோ)Sponsoredஇலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைத் தூதுரக அதிகாரி ஒருவர் தமிழர்களை மிரட்டும் தொனியில் சைகை காட்டியுள்ளார். 

Sponsored


இலங்கையின் 70 வது சுதந்திர தினம், அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டாடும் பொருட்டு லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த தமிழர்கள், இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, `போரின்போது காணாமல் போன சிறைக் கைதிகளின் நிலை என்ன, அரசியல் கைதிகள் உடனடியாக விடிவிக்கப்பட வேண்டும், இலங்கை ராணுவம் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லக் கூடாது, இலங்கை தமிழர்களுக்கு சுயநிர்ணயம் செய்யும் உரிமை வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் தமிழர்களை மிரட்டும் தொனியில் சைகை காட்டி மிரட்டியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 

Sponsored
Trending Articles

Sponsored