போராட்டத்தை `ஃபேஸ்புக் லைவ்’ செய்த சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 14 ஆண்டுகள் சிறை!Sponsoredசுற்றுச்சூழல் மாசு குறித்த போராட்டத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த ஆர்வலருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Photo: www.hrw.org 

Sponsored


வியட்நாம் கடல் பகுதியில் தைவானைச் சேர்ந்த ஃபார்மோஸா என்ற எஃகு ஆலை டன் கணக்கில் கழிவுகளைக் கொட்டியதால், அந்தப் பகுதியில் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதனால், லட்சக்கணக்கான மீன்கள் கடலில் செத்து மிதந்ததாகவும் மீனவர்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அந்த நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Sponsored


இந்தநிலையில், தைவான் நிறுவனத்தின்மீது வழக்கு தொடர மீனவர்கள் பேரணியாக நீதிமன்றம் சென்றனர். அந்த நிகழ்வை ஹோங்க் டக் பின்ஹ் (Hoang Duc Binh) என்ற சூழலியல் ஆர்வலர் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். இதையடுத்து, ஹோங்கைக் கைது செய்த வியட்நாம் போலீஸார், அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். அரசுக்கு எதிராகச் செயல்படுதல், அரசு அலுவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை வியட்நாமின் நெஹ் மாகாண நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக ஹோங்க்-க்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இரண்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த நாம் பேங்க் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   
 Trending Articles

Sponsored