``பிரதமர் மோடிக்கு கிராண்ட் காலர் விருது!’’ - பாலஸ்தீனம் கௌரவம்Sponsoredநான்கு நாள்கள் பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். 

முதலாவதாக ஜோர்டன் சென்ற பிரதமர் மோடி மன்னர் அப்துல்லாவைச் சந்தித்து இருநாடுகள் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கிருந்து இன்று (10.2.2018) பாலஸ்தீனம் சென்றடைந்தார் மோடி. இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல்முறை ஆகும். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது,  வெளிநாட்டினருக்கு தரப்படும் உயரிய விருதான கிராண்ட் காலர் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி பாலஸ்தீன அரசு கௌரவப்படுத்தியது. 

Sponsored


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய மோடி, "பாலஸ்தீனம் இந்தியாவுக்கு மரியாதை செய்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் பாலஸ்தீனத்துக்கு உயரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. துணிச்சலுக்கு உதாரணமாக பாலஸ்தீனியர்கள் திகழ்கின்றனர். பாலஸ்தீனம் - இந்திய மாணவர்கள் பரிமாற்றம் 100ஆக அதிகரிக்கப்படும்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored