இந்தியாவுக்கு வரும் கனடா பிரதமர்... ஐஐஎம் மாணவர்களுடன் பேசுகிறார்கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ், அரசு முறைப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். வரும் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ட்ரூடேவ், இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 19-ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு (ஐஐஎம்)ச் செல்கிறார். அங்கு மேலாண்மைக் கல்வி பயின்றுவரும் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார். அகமதாபாத் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கும் முதல் அயல்நாட்டுத் தலைவர், ஜஸ்டின் ட்ரூடேவ்.

Sponsored


அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேசவிருக்கிறார். முக்கியத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பின்போது, இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி. வணிகம், மருத்துவம் போன்ற விவகாரங்கள் தொடர்பாகப் பேச இருக்கிறார்.  23-ம் தேதி, கனடா செல்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored