ஹபீஸ் சையதை தீவிரவாதியாக அறிவித்தது பாகிஸ்தான்!Sponsored2008-ம் ஆண்டு  நவம்பர் 26-ம் தேதி 10 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் 'சி.எஸ்.டி' ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள், காவல்துறை அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் என 164 பேர் பலியானார்கள். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஜமாத் -உத்-தவாத் தலைவர் ஹபீஸ் சையத் என்பவர் மூளையாகச் செயல்பட்டார் எனத் தெரியவந்தது. இதையடுத்து தேடப்படும் முக்கியத் தீவிரவாதி பட்டியலில் ஹபீஸ் சையத் இடம்பெற்றார். பின்னர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட ஹபீஸ் சையதை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இருப்பினும் ஹபீஸ் சையதை விடுவிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. மேலும் அவரின் தலைக்கு ரூ.55 கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தது. இதேபோல் ஐநா சபையும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்தது. 

Sponsored


எனினும் தீவிரவாதிகள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது ஹபீஸ் சையதை தீவிரவாதி எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பணிந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இயற்றியுள்ள அவசர சட்டம் ஒன்றின் மூலம் ஐநா சபை தடை செய்துள்ள 27 அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்பு என்று கூறி, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் -உத்-தவாத் உள்ளிட்ட 27 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored