தனது குழந்தைக்குப் பாலூட்டிய உலகின் முதல் திருநங்கை! Sponsoredதிருநங்கைகள் குழந்தை பெற்றெடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடை அறியாத போது, 30 வயது நிரம்பிய திருநங்கை தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய நிகழ்வு மருத்துவ அறிவியல் துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கனடாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் திருநங்கை ஒருவர். ஆனால், வாடகைத் தாயாக இருந்தவர் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதில்லை எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அத்திருநங்கை மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். அவருடைய விருப்பத்திற்கு இணங்க, குழந்தை பிறப்பதற்கு முன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவருக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டது. பாலியல் மறுசீரமைப்பு மற்றும் வாஜினோபிளாஸ்டி போன்ற மார்பக அறுவை சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், ஹார்மோன் அளவுகளை மாற்றும் சிகிச்சை மூலமாக திருநங்கைக்குத் தாய்ப்பால் சுரக்கும்  முறையில் வெற்றி கண்டுள்ளனர் மருத்துவர்கள். திருநங்கைகளுக்கான எம்.டி. சினாய் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மையம் இந்தச் சிகிச்சையை அளித்துள்ளது. 

இந்த சிகிச்சையை மேற்கொண்ட திருநங்கை, தனது குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் தரும் தன்மையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி, தொடர்ந்து ஆறு வாரங்களுக்குத் தாய்ப்பால் தரும் வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மற்ற ஊட்டச்சத்து உணவுகள் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவும் ஆறு மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் தர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 

சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் தாமர் ரைஸ்மேன் கூறுகையில், திருநங்கைகளுக்கான மருத்துவத் துறையில் திருப்புமுனையாக இச்சிகிச்சை இடம்பெற்றுள்ளது எனவும், மருத்துவ அறிவியல் துறையில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது எனவும் கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored