`அமைச்சர்களுக்கு அந்தரங்க உரிமை உள்ளது! ஆனால்...’ - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்Sponsoredதங்களது பெண் ஊழியர்களுடன் ஆஸ்திரேலிய அமைச்சர்கள்  ‘பாலியல்’ உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

தேசியக் கட்சித் தலைவரும் மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமருமான பர்னபி ஜாய்ஸ், தன்னிடம் பத்திரிகை ஆலோசகராகப் பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பெண்ணுடன் ’பாலியல்’ தொடர்பு வைத்திருந்த சம்பவம், அண்மையில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பர்னபி ஜாய்ஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. 

Sponsored


இந்த அசாதாரண அரசியல் சூழ்நிலையை சமாளிக்க, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆஸ்திரேலிய மந்திரிகள் தங்களுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் ‘பாலியல்’ உறவு வைக்கக் கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மந்திரிகளுக்கு அந்தரங்க உரிமை உள்ளது’ இருப்பினும், மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மந்திரிகள் இருக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதால், இத்தகைய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored