இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணம் - ஆன்மிக ஆலோசகரை மணந்தார்! Sponsoredபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 1995ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்திற்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது. 

Sponsored


இந்த நிலையில், மூன்றாவதாக புஷ்ரா மேனகா (வயது 40) என்பவரை இம்ரான் கான் மணந்துள்ளார். இவர்களது திருமணம், லாகூரில் உள்ள மேனகாவின் சகோதரர் வீட்டில் நேற்று எளிமையாக நடைபெற்றது. புஷ்ரா மேனகா, ஓர் ஆன்மிக ஆலோசகர் ஆவார். அவரிடம் ஆன்மிக ஆலோசனை பெறச் சென்றபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தினால், தற்போது திருமணம் செய்துகொண்டனர். மேனகா ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored