இப்படியும் ஒரு நாடு... உபரி பட்ஜெட்டால் மக்களுக்கு போனஸ் போடும் சிங்கப்பூர்!ட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் அரசு, அந்நாட்டு குடிமகன்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனஸாக வழங்க முடிவுசெய்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமகன்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.

Sponsored


2018-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீட் ஹீட் இதை அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்கும் 27 லட்சம் பேர் இந்தப் பயனைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். ஆண்டுக்கு 28 ஆயிரம் டாலர்களுக்குக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிப்பவர்களுக்கு 200 டாலர்களும், அதற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 100 டாலர்களும் போனஸாகக் கிடைக்கும். 2018-ம் ஆண்டுக்குள் இந்த போனஸ் வழங்கப்பட்டுவிடும். இதற்கு 700 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவாகும். 

Sponsored


இந்த ஆண்டு மட்டும், சிங்கப்பூர் பட்ஜெட்டில் 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் உபரி வருவாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் முதலீட்டில், சிங்கப்பூரில் புதிய ரயில் திட்டங்களுக்கும் 2 பில்லியன் டாலர்களைக்கொண்டு முதியவர்களைக் காக்கும் வகையில் புதிய இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கும் அந்நாடு திட்டமிட்டுள்ளது.

Sponsored


பற்றாக்குறை பட்ஜெட் போடும் நாடுகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நாடு!


 Trending Articles

Sponsored