இலங்கை அமைச்சரவை மாற்றம் - ரணிலை கிண்டல் செய்யும் அமைச்சர்!Sponsoredஇலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் தான் வகித்துவந்த தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையுடன், சட்டம் ஒழுங்குத் துறையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூடுதலாகக் கவனிப்பார். 

அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவால், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த ’ஒற்றுமை’ அரசாங்கம் நீடிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனால், ரணிலும் மைத்திரியும் கலந்துபேசி அமைச்சரவையில் மாற்றம்செய்வது என்று மட்டும் முடிவெடுத்தனர். அதன்படி ஆறு கேபினெட் அமைச்சர்கள், மூன்று இணை அமைச்சர்கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் ஆகியோரின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

Sponsored


முன்னதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்னிலங்கை மேம்பாட்டுத் துறைகளை கவனித்துவந்த சகல ரத்னநாயகே, இனி, இளைஞர் விவகாரம் மற்றும் தென்னிலங்கை மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பார். கொழும்புவில் உள்ள  அரசு அதிபர் செயலகத்தில் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியில், அதிபர் மைத்திரிபால சிறிசேனா அமைச்சர்களுக்கான பதவிமாற்றத்தைச் செய்துவைத்தார். 

Sponsored


அமைச்சரவை மாற்ற விவரம்:

கேபினெட் அமைச்சர்கள்

ரணில் விக்கிரமசிங்கே - சட்டம் ஒழுங்குத் துறை அமைச்சர்

இலக்சமண் கிரியெல்லா - பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கண்டி மேம்பாட்டுத் துறை 

கபீர் ஹசீம் - உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை

சகல ரத்னநாயகே - இளைஞர் விவகாரம் மற்றும் தென்னிலங்கை மேம்பாட்டுத் துறை

ஹரன் ஃபெர்னாண்டோ - வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு

இரவீந்திர சமரவீரா - வனம் மற்றும் நிலைத்த வளர்ச்சி துறை 

இணையமைச்சர்கள்

பியசேன கமகே - இளைஞர் விவகாரம் மற்றும் தென்னிலங்கை மேம்பாட்டுத் துறை

அஜித் பெரேரா - சிறைச் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு துறை

ஹர்ச டி சில்வா - தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை

துணை அமைச்சர் 

ஜே.சி. அலவதுவலா- உள்துறை 

முதல் கட்டமாக, இப்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்படும் என்று பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபர் மைத்திரி தெரிவித்தார். அமைச்சரவை மாற்றத்தை அடுத்து, இலங்கை அரசின் பொது நிறுவனங்கள் மற்றும் கழகங்களின் பதவிகளிலும் நிர்வாகத் திறன் அடிப்படையில் மாற்றம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

பெரிய அளவுக்கு அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், இந்தச் சிறிய மாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது குறித்த அதிருப்தி வெளிவரத் தொடங்கிவிட்டது. அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த இணை அமைச்சர் வசந்த சேனநாயக்க, ” இது ஒரு நகைச்சுவை நாடகம். இதன் அடுத்தகட்டம் நாளை  (செவ்வாய்) அரங்கேறும். அதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்களா அழுவார்களா என்று தெரியாது ” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதைப் போலவே கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, “ இந்த மாற்றமானது, ஒரு நகைச்சுவையாக இருக்கிறது. மக்களின் எதிர்பார்க்கும் மாற்றம் சில அமைச்சர்களை மாற்றுவது அல்ல; மக்களின் எதிர்பார்ப்புகள் அமைச்சரவை மாற்றத்தில் எதிரொலிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். Trending Articles

Sponsored