ஐ.நா தீர்மானத்தை மீறி சிரியா அரசு தாக்குதல்! - ஒரே வாரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புSponsoredகிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர்மீது ஐ.நா போர் நிறுத்தத் தீர்மானத்தை மீறி சிரியா அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

Photo Credit: AP

Sponsored


சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. போரால் கடுமையான பாதிப்புக்குள்ளான அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் குடியேறி வருகின்றனர். சிரியா ராணுவம், ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகள் உதவியுடன் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் நகரங்கள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் சிரியா அரசு ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

Sponsored


சிரியா எல்லைப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி நகரான கிழக்கு கௌட்டாமீது அரசு ஆதரவுப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காகக் கூடிய ஐ.நா அவையில், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்வதற்காகவும் அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் 30 நாள்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியது. 

Photo Credit: AP

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், சிரியா அரசுப் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. வொயிட் ஹெல்மெட்ஸ் என்றழைக்கப்படும் சிரியா சிவில் டிஃபென்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, `சிரியா அரசு ஆதரவுப் படைகள் வான்வழியாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிலும்  குறிப்பாக கடந்த 2 நாள்களாக குளோரின் வாயு மூலம் தயாரிக்கப்பட்ட குண்டுகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்கிறார்கள். நேற்று (25.2.2018) மூச்சுத்திணறல் காரணமாகக் குழந்தை ஒன்று உயிரிழந்துவிட்டது. சிரியா ராணுவப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 520-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 Trending Articles

Sponsored