புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இருந்து குதித்த இளைஞர்! பதறிப்போன பணிப்பெண்கள்Sponsoredதான் செல்ல வேண்டிய விமானம் இது இல்லை என்று விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தொடர்ந்து கத்திக் கூப்பாடுபோட்டு, விமானத்தின் அவசரக்கால ஜன்னல் வழியே குதித்து தப்பிச் சென்றுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரின், நெவார்க் விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் ட்ராய் ஃபட்டூன் (25) என்பவர் சென்றுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள மைக்ரோனேஷியா எனும் பகுதியைச் சேர்ந்தவர்.

Sponsored


Sponsored


விமானத்தில் ஏறிய ட்ராய் ஃபட்டூன், சட்டென இது, தான் பயணிக்க வேண்டிய விமானம் இல்லை. அதனால், என்னை இறக்கிவிடுங்கள் என்று விமானப் பணிப்பெண்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், விமான அதிகாரிகளோ தற்போதைய நிலையில் உங்களை இறக்கிவிட முடியாது, அதனால், பொறுமைகாத்து அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

அதிகாரிகளின்  பேச்சால், தனது பொறுமையை இழந்த ட்ராய் ஃபட்டூன், எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென, விமானத்தின் அவசரக்கால ஜன்னலைத் திறந்து, விமானத்தின் இறக்கைமீது குதித்துள்ளார். அதனால், விமான இறக்கைமீது ஊற்றப்பட்டிருந்த சுடுநீர் ட்ராய் ஃபட்டூன்மீது பட்டு காயம் ஏற்பட்டது. இவரின் இந்தச் செயலால் விமான பணிப்பெண்கள் பதறிப்போனார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால், விமானக் காவலர்கள் அவரைக் கைது செய்து விசாரித்து, பயணச்சீட்டை பரிசோதனை செய்ததில், அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவரின் இந்த விபரீதச் செயலால் அந்த விமானம் காலதாமதமாகப் புறப்பட்டது.Trending Articles

Sponsored