`இனி ஸ்டைலாக முடிவெட்ட மாட்டோம்' - போர்க்கொடி தூக்கிய தொழிலாளர்கள்Sponsoredவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள முடிவெட்டும் கடைகளில் இனி ஸ்டைலாக முடிவெட்ட மாட்டோம் என அந்நாட்டு முடி திருத்துபவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் பாகிஸ்தானில் நடைபெற்ற முடி திருத்துபவர்களுக்கான சங்க மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  முன்பு பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வந்தபோது அங்கு ஸ்டைலாக தாடி வெட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தது, அவர்களின் ஆட்சி முடிவடைந்த நிலையில் தற்போதும் இந்தத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் அப்பகுதியில் மீண்டும் தீவிரவாதிகள் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Sponsored


ஆனால், இதை அந்நாட்டு முடி திருத்துபவர்கள் சங்கத் தலைவர் ஷரிஃப் கலோ மறுத்துள்ளார். பாகிஸ்தான் இஸ்லாம் நாடு என்பதால் அங்கு இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் உள்ளது. அந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Sponsored
Trending Articles

Sponsored