ஆஃப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு..! ஏழு பேர் பலிஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Sponsored


ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் ஷியா பிரிவினருக்கான மசூதி உள்ளது. அந்தப் பகுதிக்கு அருகில் ஷியா ஹசாரா அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவர் அப்துல் அலி மஷாரி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்துக்குள் நுழையும்போது, தற்கொலைப் படைத் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். அதில், ஏழு பேர் உயிரிழந்ததாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored