''நிதி மோசடி; மொரிஷீயஸ் பெண் அதிபர் ராஜினாமா..!''Sponsoredநிதி மோசடியில் சிக்கிய  மொரிஷீயஸ் பெண் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியப்  பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இநாட்டின் முதல் பெண் அதிபராக 2015-ஆம் ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பொறுப்பு ஏற்றார். இவருக்கு அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) சார்பில் வழங்கப்பட்ட வங்கி அட்டையை  முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அதாவது, அந்த என்.ஜி. ஓ-வின் சம்பளம் வாங்காத இயக்குநர் என்ற பொறுப்பில் அவர் இருந்தார். அவருக்கு செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளும்படி வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் துணி, தங்கம் மற்றும் வைர  நகை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான பொருட்களை வாங்கி இருந்தது அந்த கிரெடிட் கார்டு அறிக்கை மூலம் அம்பலமானது.

Sponsored


இந்த புகார் வெளியானவுடன் அந்த பணத்தை திருப்பி கொடுக்கப்போவதாக அதிபர் அறிவித்தார். ஆனாலும் அதை அந்நாட்டு அரசு ஏற்கவில்லை.  இதையடுத்து அவர்  அதிபர் ராஜினாமா செய்தார்.  இதுதொடர்பாக, பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் கூறுகையில், '' அதிபர் மீதான மோசடி ஊர்ஜிதமாகி உள்ளது. நாட்டு நலன் கருதியே அவர் ராஜினாமா செய்துள்ளார்'' என்றார். மொரிஷியஸ் நாடு தனது  தனது 50 வது குடியரசு தினத்தை வரும் 15 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் அதிபர் ராஜினாமா செய்துள்ளார். பெண் அதிபரான இவர், விஞ்ஞானி ஆவார். அவருக்கு 58 வயது ஆகிறது.

Sponsored
Trending Articles

Sponsored