`67 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்!’ காத்மாண்டு விமான நிலையம் மூடல்Sponsoredபங்களாதேஷ் விமானம், நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இன்று மதியம் அமெரிக்கா-பங்களாதேஷ் இடையிலான விமானம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு விமானநிலையத்தில் தரையிறங்கும்போது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் சுமார் 67 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணம் செய்ததாகவும், இதுவரை 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 50 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

Sponsored


இது மிகப் பெரிய விபத்தாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. சுமார் 50 பேர் வரை இறந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக காத்மண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் கருமையான புகையுடன் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

Sponsored
Trending Articles

Sponsored