துவங்கியது ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!Sponsoredரஷ்யாவின் அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2000 ஆண்டு முதல் அதிபராகவும், பிரதமராகவும் விளாடிமிர் புதின் உள்ளார். தற்போது இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று அதற்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இவரைத் தவிர இந்தத் தேர்தல் களத்தில் 7 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.

Sponsored


இந்த முறை புதின் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மாஸ்கோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக அந்நாட்டில் 11 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இது தவிர தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் ரஷ்ய வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான வாக்கு சீட்டுகள் சென்னை வந்தடைந்துள்ளதாகவும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த முறையும் புதின் வெற்றிபெற்றால் வரும் 2024 ஆம் ஆண்டு வரை அவரே அதிபர் பதவியில் நீடிப்பார்.

Sponsored
Trending Articles

Sponsored