பள்ளியைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்! - 15 குழந்தைகள் பரிதாபப் பலி #SyriaSponsoredசிரியாவில் உள்ள ஒரு பள்ளியைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், 15 பள்ளிக் குழந்தைகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில், கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கடந்த 7 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. சிரியா ராணுவம், ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகளின் உதவியுடன் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் நகரங்கள்மீது தாக்குதல் நடத்திவருகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் சிரியா அரசு ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்திவருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை சுமார் 3 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Sponsored


கடந்த மாதம் நடந்த வான்வழித் தக்குதலில், ஒரே வாரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகளே அதிகம். இந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஐ.நா நாடுகளும் சிரியாவுக்கு எதிராகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, 30 நாள்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Sponsored


இந்நிலையில், நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தைக் குறிவைத்து, வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 15 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், இந்தத் தாக்குதல்குறித்து சிரியா அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.Trending Articles

Sponsored