தற்கொலை படை தாக்குதலில் பறிபோன 26 உயிர்கள்! காபூலில் தீவிரவாதி வெறிச்செயல்Sponsoredகாபூலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் தலைநகரான காபூலில்  நவ்ரூஸ் எனப்படும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இன்றைய கொண்டாட்டத்தின்போது ஷிட்டே ஸ்ரின் என்ற வழிபாட்டுத் தளத்தில் பலபேர் கூடியிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த தற்கொலை படை தாக்குதலை சேர்ந்த ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது உடலில் கட்டியிருந்த குண்டைவெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் இதுவரை 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sponsored


வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அந்நாட்டு மக்கள் கொண்டாடும் இந்த விழாவில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருப்பது அவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. 

Sponsored
Trending Articles

Sponsored