கிச்சனில் டாய்லட்... அறையின் வாடகை 25 ஆயிரம்... 'பள பள' ஹாங்காங்கின் இருண்ட பக்கம்!Sponsoredயில் பர்த் போல ஒரு சிறிய படுக்கை.  பெட்டுக்கு முன் சிறிய டி.வி. சாப்பிட்ட தட்டுகள் கால்களுக்கிடையே கிடக்கின்றன. இரு பக்கங்களிலும் பொருள்கள் தாறுமாறக இறைந்துள்ளன.. உடைகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. சமையல் அறைக்குள்ளேயே கழிவறை.... இப்படியும் ஒரு வீடு... அதிலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இது ஏதோ மும்பை தாராவி என்று நினைத்து விடாதீர்கள். உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் ஓடும் 'பளபள' ஹாங்காங் நகரத்தின் இருண்ட பக்கத்தை காட்டும் கல்லறை வீடுகள்தாம் இவை.  'coffin Cubicles’ என்று அழைக்கப்படும் இந்த மினியேச்சர் வீடுகளை ஒரு முறை சென்று பார்த்தால் 'மனித வாழ்க்கை இவ்வளவு துயரம் நிரம்பியதா? என வெறுமை சூழ்ந்து கொள்ளும். 

photo :  Kin Cheung /AP

Sponsored


ஹாங்காங் என்றதும் ஜாக்கிசானும் வானுயர்ந்த கட்டடங்களும்தான் நினைவுக்கு வரும். ஷாங்காய் நகரம் உருவாவதற்கு முன் சீனாவின் மிக முக்கிய துறைமுக நகரம் இது. சுற்றுலாவால் வளம் கொழிக்கும் பூமி. இரவில் பார்த்தால் நியூயார்க் நகரம் தோற்றுவிடும். அவ்வளவு  அழகுடன்  மின்மினி பூச்சியாக மின்னும். பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில்தான் ஹாங்காங் நகரம் பிரமாண்ட வளர்ச்சியை எட்டியது. 1997- ம் ஆண்டு ஹாங்காங் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது,  காஷ்மீர் போல தனி அந்தஸ்துடன் ஹாங்காங் நகரம் சீனாவுடன் உள்ளது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில்,  பணக்காரர்களிடத்திலேயே செல்வம் மேலும் மேலும் சேர்வதால், சம நிலை வருவாய் இல்லாத மக்கள் அதிகம்.  

Sponsored


செல்வச்செழிப்புமிக்க ஹாங்காங் நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. ஏழை மக்கள் வாடகை கொடுத்து வசிப்பது எல்லாம் கடினமான காரியம். இதனால், ஹாங்காங் நகரில் 2 லட்சம் மக்களுக்குக் கல்லறை வீடுகள்தாம் கூண்டு. அதில், 40 ஆயிரம் சிறார்களும் இருக்கிறார்கள். புறாக்கூண்டில் பார்ட்னர்ஷிப் போலத்தான் பல குடும்பத்தினரின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. சுமார்  6’ x 2.5’  என்ற அளவுள்ள பகுதிக்குள் பெட், டி.வி., கழிவறை, கிச்சன் எல்லாமே சேர்ந்தே இருக்கிறது.  400 சதுர அடி கொண்ட வீடு 20 பேர் வாழக்கூடிய கல்லறை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. கல்லறை வீட்டுக்கு வாடகை கேட்டால் தலை சுற்றி விடும். மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை கட்டினால்தான் கல்லறை வீடு கூட உங்களுக்குக் கிடைக்கும். 

பொதுவாக ஹாங்காங்கின் அடித்தட்டு மக்கள்தாம் கல்லறை வீடுகளில் வசிக்கின்றனர். வெயிட்டர்கள், காவலாளிகள், சலவைத் தொழிலாளி, சவரக்கடைக்காரர் போன்றவர்களுக்குக் கல்லறை வீடுகள் மட்டுமே கதி. 1950- ம் ஆண்டு முதலே ஹாங்காங்கில் கல்லறை வீடுகளில் மக்கள் வசிக்கத் தொடங்கியுள்ளனர். சீனாவிலிருந்து வந்த தொழிலாளர்கள்தாம் முதலில் குடியேறினர். ஹாங்காங் பணக்கார நகரமாக இருந்தாலும் ஆறில் ஒரு ஹாங்காங்வாசி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளார். வாங்கும் சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கே போய் விடும்.  

ஹாங்காங்கில் கல்லறை வீட்டில் வசிப்பதை விட ஏதாவறு குற்றம் செய்து விட்டு சிறைக்குச் சென்று சொகுசாக வாழலாம் என்று கூட காமெடிக்குச் சொல்வார்கள். ஏனென்றால்,  சிறைவாசிகளுக்குக் கூட அங்கே நல்ல அகலமான அறையில் சுகாதாரமான முறையில் வாழ முடியும். கடந்த 2015- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஹாங்காங்கில் 88 ஆயிரம் கல்லறை வீடுகள் உள்ளன. ஐ.நா அமைப்பு ,`கல்லறை வீடுகள் மனித குலத்துக்கே இழுக்கு. கல்லறை வீடு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஹாங்காங் அரசால் கல்லறை வீடுகளை ஒழிக்க முடியவில்லை. கல்லறை வீட்டுவாசிகளுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு கல்லறை வீடுகளும் துயரம் நிறைந்தது!

photo;  benny lam

நோயாளியான தாயைக் காப்பாற்றப் போராடும் மகன் , சகோதரியைப் படிக்க வைக்கும் சகோதரன், பெற்றோரை இழந்த பேரனை வளர்க்கும் தாத்தா, வாயோதிகத்துடனும் நோயுடனும் போராடும் மூதாட்டி, கணவரை இழந்து குழந்தைகளுடன் தவிக்கும் தாய், இன்றாவது வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்த கண்களுடன் வாழும் இளைஞர்கள்... இவர்கள்தாம் கல்லறை வீடுகளின் அங்கத்தினர். `நேஷனல் ஜியராகிரபி' சேனலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பென்னி லாம், ஒரு முறை கல்லறை வீடுகளைப் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தார். 'அன்றைய தினத்தில இரவு முழுவதும் மனித வாழ்க்கையை நினைத்து நான் அழுது கொண்டே இருந்தேன்'' என ஃபேஸ்புக்கில் மிகுந்த வேதனையுடன் கல்லறை வீடுகள் குறித்து பென்னி லாம் பதிவிட்டிருந்தார்.

வாழ்க்கை முடிந்த பிறகு கல்லறையை நோக்கிப் பயணிப்போம்...இங்கே  கல்லறையில் வாழ்வதே சிலருக்கு வாழ்க்கையாகிவிடுகிறது!Trending Articles

Sponsored