சீனாவுக்கு 'செக்' வைக்கும் அதிபர் ட்ரம்ப்Sponsoredஅமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருள்களுக்கு, ரூ.4 லட்சம் கோடி வரியை அதிகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார், அதிபர் ட்ரம்ப். 

அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்ற நாள் முதல், ட்ரம்ப் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை விடாப்பிடியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் முதற்கட்டமாக, இந்தியர்களின் ஹெச்.1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

Sponsored


அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக, சீன நிறுவனங்களிடமிருந்து அமெரிக்காவில் இறக்குமதிசெய்யும் பொருள்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார். இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் சீனா, தனது பொருள்களைப் பெருமளவில் ஏற்றுமதிசெய்துவருகிறது. 

Sponsored


சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் சீனப் பொருள்களுக்கான வரி, வெறும் 2.5 சதவிகிதம்தான் எனக் கூறி, சீனாவுடன் வர்த்தகரீதியாகப் போராட முடிவுசெய்துள்ளது ட்ரம்ப் அரசு. ட்ரம்ப் அரசின் இந்த முடிவை அடுத்து, வர்த்தகரீதியாக உங்களுடன் போராடத் தயார் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. Trending Articles

Sponsored