இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

Sponsored


இன்று அதிகாலை, இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டா கடல்பகுதியில் பூமிக்கடியில் 171 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Sponsored


நிலநடுகத்தை அடுத்து இந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு சார்பில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பெருங்கடல்
பகுதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டது. அதன் பின் சுனாமி அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது

Sponsored


இந்த நிலநடுகத்தால் இந்தோனேஷியாவில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகில் அடிக்கடி நிலநடுக்கத்தைச் சந்திப்பது இந்தோனேஷியாதான் இந்த ஆபத்தான இடத்தை ‘நெருப்பு வளையம்’ என்றும் அழைப்பர். இங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும்பாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. 
 Trending Articles

Sponsored