பாகிஸ்தான் ஊடக வரலாற்றில் முதன்முறையாகச் செய்தி வாசிக்கும் திருநங்கை!Sponsoredபாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில், முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசித்துள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி, பாகிஸ்தானின் ஊடக வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு திருநங்கையை செய்தி வாசிக்கச்செய்து பிரபலமாக்கியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவரும் இந்தத் தொலைக்காட்சி, மறு சீரமைப்பு செய்து, புது வடிவில் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக் கிழமையன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. அதில், மரிவியா மாலிக் என்ற திருநங்கையை செய்தி வாசிப்பாளராக அந்தத் தொலைக்காட்சி அறிமுகம்செய்துள்ளது.

Sponsored


சமீபகாலமாக பாகிஸ்தான் அரசு, திருநங்கைகளுக்காகப் பல சலுகைகளையும் திட்டங்களையும் செய்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு,  திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை முடிவுசெய்யும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக்கொள்ள மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இந்நிலையில், அங்குள்ள தொலைக்காட்சியில் திருங்கை  மாலிக் செய்தி வாசித்து அனைவரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுவருகிறார்.

Sponsored
Trending Articles

Sponsored